ராகம் – கர்ணரஞ்சனி தாளம் – ஆதி
பல்லவி
தரணியெலாம் முழங்கும் தாரக நாமம்
ஸ்ரீராம நாமம் எனும் மந்திரமே – அயோத்தியா
ராம நாமம் எனும் ஓரு மந்திரமே (தரணி)
அனுபல்லவி
ஒருசொல் ஒருஇல் ஒருபாணம் ராமனே
ஒருமுறையேனும் அவன் நாமம் சொல் என் நாவே (தரணி)
சரணம் 1
ஓராயிரம் நாமம் நாரணன் நாமம்
ஒரு ராம நாமம் அது போதுமே.
உருகி அவன் நாமம் சொன்னாலும் போதுமே
இருவினை தீரந்து, வரும் பேரின்பமே. (தரணி)
சரணம் 2
மராமரா என்றான் வால்மீகி முனிவன்
ஸ்ரீராம காவியத்தின் கவிஞனாகினான்.
மராமரம் எரித்த ராம நாமத்தால் அனுமான்
ஈரேழு உலகம் போற்றும் தெய்வம் ஆகினான் (தரணி)