ராகம் – அடாணா தாளம் – ஆதி
பல்லவி
ப்ரகலாதனைக் காக்க எரிதழலாய்த் தூண் பிளந்து
அரி உருவாய் வந்த அஹோபில வரதனே (ப்ரகலாதனை)
அனுபல்லவி
கருணையும் கோபமும் கண்களில் இருந்தாலும்
அரவணைக்கும்நெஞ்சம் அடியவரைத்தாங்கும் (ப்ரகலாதனை)
சரணம்
திருமகள் செஞ்சு லட்சுமியை மணந்த வேடுவனே
நீராகிப் பாபநாசினியில் பாவம் போக்கும் நாதனே
தருமம், பித்ருகர்மம்,அருந்தவப்பயன் எல்லாம்
பெருக்கியே நமைக்காக்கும நவநரசிம்மனே (ப்ரகலாதனை)