ராகம் – ஹம்ஹநாதம் தாளம் – ஆதி இரட்டைக்களை
பல்லவி
திருவாய் மொழியின் ஒருநாயகனே! உலகம் மூன்றும் உண்ட பெருமானே!
திருவாறன் விளையில் தானே அமர்ந்து பாடல் அரங்கேற்றம் செய்தவனே! (திரு)
அனுபல்லவி
திருக்குறளப்பன் பாம்பணையான் பத்மாசனியின் கேள்வனே!
பார்த்தன் கர்ணனைக் கொன்ற பாவம் தீர்த்த பரிகாரத்தலத்தின் சேஷாசனனே! (திரு)
சரணம்
ஆறன்முளாவில் பம்பாதீரத்தில் அடியவர்க்கருளும் கோவிந்தனே!
பரமபதத்தை விட்டிறங்கி நம்மாழ்வார் உள்ளம் நாடி வந்தவனே!
பிரமனுக்குதவும் வேதம் நான்கும் மீட்க மதுகைடபரை அழித்தவனே!
திருவாய்மொழிக்கு இணையாகும் ஒரு திவ்ய க்ஷேத்திரத்தில் உறைபவனே! (திரு)