ராகம் – ஆந்தோளிகா தாளம் – ஆதி
பல்லவி
அற்புத நாராயணனே! அம்ருத மயமானவனே!
கற்பகத் தருவாயருளும் கற்பகவல்லி நாயகனே! (அற்புத)
அனுபல்லவி
பொற்பதம் பணிந்தே ஒரு நாழிகை தவம்செய்தாலும்
நற்கதி அருள்வான் தண்துழாய் முடிஅப்பனே! (அற்புத)
சரணம்
வற்றாத பாலமுதூட்டும் திருக்கடித்தான் நாரணனே!
உற்றானாய் என் நெஞ்சிலும் சிலையிலும் உறையும நாரணனே!
பற்றும் என்வினைப்பயன் நீங்கிட இறையாய் நின்றவனே!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பலன்தரும் ஏகாதசிப் பெருமாளே! (அற்புத)