ராகம் – நாதநாமக்கிரியா தாளம் – ஆதி இரட்டைக்களை
பல்லவி
உன்னைச் சரணடைந்தேன் ஹரியே!
உன்னருளாலே உனையே சரணடைந்தேன். (உன்னை)
அனுபல்லவி
உன்சரணல்லால் சரணில்லை திருவித்துவக்கோட்டு அம்மானே!.
பன்னக சயனா பரமபுருஷா பத்மபாணியின் நாயகனே! (உன்னை)
சரணம்
இன்பத்தில் பேரின்பமே தரும் உய்யவந்த பெருமாளே!
துன்பப் புயலில் கரைகாணாதவர்க்கு அபயம் அளiக்கும் திருமாலே!
பாண்டவர்க்கு நால்வடிவமாம் அபயப் பிரதானப் பெருமாளே!
அன்னை போல அம்பரீஷனைக் காத்த சக்கரக்கையானே! (உன்னை)