ராகம் – த்விஜாவந்தி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
வேதவேள்வி ஒலி முழங்கும் வண்டூர் அமரர் பிரானே!
நாதனே! பாம்பணையானே! செங்கமல நாதனே! (வேத)
அனுபல்லவி
மாதவனே! கமலவல்லியின்நாயகனே! உந்தன் திருப்
பாதம் பணிந்தேன் அருள்வாய் சாரங்க பாணியே! (வேத)
சரணம்
நாதப்ரம்மம் நாரதரின் சாபம் தனை நீக்கிய
முதற்பொருளே! வல்வினைகளனைத்தும் அகற்றும் திருமாலே!
சோதி மணிவண்ணனே! மெய்யடியாரைக் கைவிடாது,
ஓதமாக்கடல் கடைந்து அமுது அளித்த கண்ணனே! (வேத)