ராகம் – ஆபோகி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
நாமம் ஆயிரம் கொண்ட திருவாழ் மார்பனே! வல்லபனே!
திருமகள் செல்வத் திருக்கொழுந்தின் அலங்காரத் தேவனே! (நாமம்)
அனுபல்லவி
பரமபக்தையைக் காத்திடவே சக்கரம் அனுப்பிய தேவனே!
எம்மானே கண்டகாசுரனுக்கு மோட்சம் அளித்த கோலப்பிரானே! (நாமம்)
சரணம்
க்ஷேமம்தரும்உன்கிருபையாலே துன்பம் வரும் காலத்திலே
திருமாலே! என்றும் துணையாயிருந்து அருளுகின்ற பெருமானே!
பாம்பணையில் துயில் நாயகனே! அலங்காரப் பிரானே!
தாமரைக் கண்ணனே! ஆதியும் அந்தமும ஆதிக்கும் ஆதியாய் ஆனவனே! (நாமம்)