
ராகம் – மதுவனி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
ஆதிரங்கநாதனே! காவிரி கொள்ளிடம் நடுவினில்
ஆதனூரில் அருள்புரிகின்றான் அழகிய மணவாளனாகவே. (ஆதி)
அனுபல்லவி
வேதநாதன் தலையின் கீழ் மரக்காலும், இடதுகையில்
எழுத்தாணியும், ஓலையும் ஏந்திய புஜங்கசயனனே!. (ஆதி)
சரணம்
பாத கமலத்தில் திருமங்கை காமதேனு அமர்ந்திருக்க
நிதம் நிதம் ஒவ்வொரு நாளும் ஆண்டளக்கும் ஐயனே!.
சோதியாம் அக்னிதேவனின் சாபம்தனைநீக்கியே
ஆதிசேடனைச் சயனமாக்கி ரங்கநாயகியுடன் (ஆதி)