ராகம் – முகாரி தாளம் – ஆதி
பல்லவி
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சில் வைப்பேன்
நின்றும் இருந்தும் கிடந்து நடந்தருளும் நெடுமாலே உனை (என்றும்)
அனுபல்லவி
தென்திசைக்கே அணியாம் திருச்செங்குன்றூரின்
திருச்சிற்றாற்றங்கரையின் செங்கமலவல்லி நாதனே! (என்றும்)
சரணம்
கன்மவினை தீர தருமன் பரிகாரம் செய்த தலத்தில்
தேனமுதாம் மாறனைக் கண்டால் அச்சம் விலகி ஓடுமே.
வன்நெஞ்ச சூரபதுமனை முருகன் வென்றிட வழிவகுத் தவனே!
முனிந்து பஸ்மாசுரனை அழித்துச் சிவனைக் காத்தவனே! (என்றும்)