ராகம் – சிந்துபைரவி தாளம் – கண்டசாபு
பல்லவி
ஒண்சுடரே! ஒளிவிளக்கே! விண்ணும் மண்ணும் அளக்கும்
விண்சுடரே என் உள்ளத்து ஞானச் சுடர் விளக்கே! (ஒண்சுடரே)
அனுபல்லவி
விண்ணவரும் காண்டற்கரிய மூழிக்களத்தானே!
தொண்டருக்கு இன்னமுதாம் மதுரவேணி நாயகனே! (ஒண்சுடரே)
சரணம்
காணும் ஐம்பூதமும் இருசுடரும் தேவர் மூவரும்
வணங்கும் முதல்வனே! ஸ்ரீசுக்தி நாயகனே!
ஞானம் தரும் திருமொழிகள் விளைந்த மூழிக்களத்தினிலே
வானின்றிழிந்து இறங்கி வந்தருளும் பெருமாளே (ஒண்சுடரே)