ராகம் – சிம்மேந்திர மத்யமம் தாளம் – ஆதி
பல்லவி
என்ன மாயம் செய்தாய் காட்கரை அப்பனே
நினைக்கும்முன் உளம்கவர்ந்து ஆழ்வாரை ஆட்கொண்டவனே (என்ன)
அனுபல்லவி
நினைத்தாலும் சொன்னாலும் நெஞ்சம் உருகிடுதே.
வினை யாவும் நீங்கிடுதே வாயாரப் பாடினாலே. (என்ன)
சரணம்
அனைத்துலகும் தன்னுள் நிற்க அவற்றுள் தானும் நிற்பவனே!
பொன் குலை வாழைக்கருளிய பெருஞ்செல்வ நாயகி நாதனே!
சின்னஞ்சிறு வாமனனாய் விளங்கி இந்த க்ஷேத்திரத்திலே,
அனைத்து தெய்வ சக்திகளுக்கும் ஆதியானவனே (என்ன)