ராகம் – கம்பீரநாட்டை தாளம் – ஆதி
பல்லவி
அன்பருக்கு அன்பனே! அடியாருக்கு எளியனே!
வண்பரிசாரத்தில் அருளும் திருவாழும் மார்பனே! (அன்பருக்கு)
அனுபல்லவி
சின்னஞ்சிறு பாலகனைக் காக்க ஓடிவந்தவனே!
சினம்கொண்டு இரணியனை வதைத்தழித்தவனே! (அன்பருக்கு)
சரணம்
மனமுருகித் தவம் செய்த கமலவல்லியைத் தேடியே
வந்தவனைத் தழுவி நெஞ்சில் இடம் பிடித்ததாள் தேவியே.
என்றும் பிறவிக் கடலை நீந்திக் கரை சேரவே,
என்தனி நாயகன் கையில் சங்கு சக்கரம் ஏந்தினான்.(அன்பருக்கு).