ராகம் – சந்த்ரகௌன்ஸ் தாளம் – ஆதி
பல்லவி
அனந்தசயனனை புஜங்கசயனனை மூன்று வாசலில் கண்டு தொழுவோம்
அனந்தன் காட்டில் ஹரிலஷ்மியுடனே ஆனந்தமாய்க் காண்போம் (அனந்த)
அனுபல்லவி
வானவர் ஏறினைச் சக்கரக் கண்ணனை ஐப்பசி திருவோண நாளினிலே
முனிவர் எழுவரும் சிவனுடன் பிரமனும் தேவரும் வணங்கி மகிழ்ந்தது போலே (அனந்த)
சரணம்
அனந்தபுர பத்மநாபனை நினைத்தால் வினைகள் மாய்ந்து போகும்..
அனந்தசயன விரதம் ஏற்றுக் கொண்டால் நினைத்தது கைகூடும்.
அனந்தபுரம் சென்று கேசவா என்றால் இடர்களெல்லாம் விலகும்.
அனந்தபுர நகர் மாயனின் நாமம் சொல்ல வீடுபேறு கிடைக்கும். (அனந்த)