ராகம் – பந்துவராளி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
வேதநாதன் நாமம் சொல்லிக் கடிகை மலைக்குச் செல்வோம்.
பக்தவத்சலன் அருளைத் தேடிப் படியில் ஏறி உயர்வோம். (வேத)
அனுபல்லவி
அமிருத வல்லியின் அக்காரக்கனியே! குன்றின மேலே கோள் அரியே!
பக்தருக்கருளும் அர்ச்சையின் வடிவில் பொலியும் பொன்மலை பரமனே (வேத)
சரணம்
ஆதவன் சந்திரன் பெருமான் திருவடி நிழலில் பேரின்பம் பெறுகின்றார்.
வேதவிமலனின் திருவடிநோக்கி அனுமன் மலையில் உறைகின்றான்.
பத்து அவதாரம் பொறித்த பட்டையைச் சூடியவன் முக்தி தருகின்றான்.
மாதவன் மறையாய் விளைந்த விளக்காய் என்னுள் ஒளியை வீசுகின்றான் (வேத)