ராகம் – ராகமாலிகை தாளம் – ஆதி (திஸ்ரம்)
பிருந்தாவன சாரங்கா
பிருந்தாவனக்ஷேத்திரம் தேடிக் கண்ணன் வந்தான்
பிருந்தாவனம் விடுத்துப் பார்த்த சாரதியாய்நின்றான்
பெருமாளைப்பிரிந்த தேவி வேதவல்லியானாள்
பிருகுமுனியால் மந்நாதனைத் திருமணமும் செய்தாள்
கானடா
நிலம் காக்கப்பாண்டவர்க்காய்த் தூதுசென்றவன்
புலன்காக்கப் போர்க்களத்தில் கீதை சொன்னவன்
குலமகளின் மானம் காக்கச் சேலை தந்தவன்
நலமருளப் பார்த்தன் தேரில் சாரதியுமானான்
ஹிந்தோளம்
கருடவாகனம்தனிலே வரதனாக வந்தவன்
அருளும் அர்ச்சா ரூபமாக அல்லிக்கேணி நின்றான்.
திருமலையின் வேங்டேசன் வேங்கடகிருஷ்ணனாக
கைரவிணி தீர்த்தக்கரையில் இன்னருள் புரிகின்றான்.
ரஞ்சனி
சீதையும் இராமனும் இலக்குவனும் அனுமனும்
மதுமானின் தவப்பயனாய் அர்ச்சா வடிவமானார்.
ஆதிசேடன் படுக்கையினில் அரிதுயிலும் அரங்கனும்
ஓதம் வந்து அலைக்கும் அல்லிக்கேணி வந்தான்.
அடாணா
எரிதழலாய்த் தூண்பிளந்து இரணியனை வதைத்திடவே
பிரகாலதனுக்கருள்செய்தவன் மகிழ்வுடன் அமர்ந்தான்.
திரிந்துழலும் சிந்தைதனைச் செவ்வனே நிறுத்திடவே
மருந்தாகினான. மஸர்க்கதிக்கு ஏணியாகினான்.
மத்யமாவதி
விழுப்புண்களைப் பார்த்தனுக்காய் ஏற்ற முகத்திலே
வழிந்தோடும் கருணையிலே எளிமையானவன்-ஞானப்
பிழம்பாகச் சங்கினையும் வாளினையும் கையிலேந்தித்
தொழுவோர்க்கு வரதஹஸ்தம் தரும் நீர்மையானான்