ராகம் – சாமா தாளம் – ஆதி
பல்லவி
அலைகடல் ஓரம் கடல்மல்லை நகரிலே
தலசயனப் பெருமாளாய் வந்தாயே (அலைகடல்)
அனுபல்லவி
நிலமங்கைத் தாயுடன் திருமகளுடனே
உலகினைக் காக்கும் உறை மாயவனே வாழி (அலைகடல்)
சரணம்
வலிந்து நலிந்து எமை நமன்தமர் பற்றும் போது
அல்லல் படாமல் எமைக் காத்திட வருவாயே.
நிலமங்கையைக்காக்க ஞானத்தினுருவானாய்
குலதெய்வமாய் நின்று ஞானஒளி தந்தாயே (அலைகடல்)