
ராகம் – தோடி தாளம் – ரூபகம்
பல்லவி
கையில் ஆழி சங்கம் ஏந்தும் ரங்கநாதனே!
பையரவில் அரிதுயிலும் புஜங்க சயனனே! (கையில்)
அனுபல்லவி
மாயனாய் ஞாலமுண்டு அன்னதான அமுதுண்டாய்.
ஐயனே! அப்பம் கேட்டவனே! அப்பக்குடத்தானே! (கையில்)
சரணம்
தயரதன் மகனாய்ப் பிறந்து இலங்கையை அழித்தாய்.
ஆயனாய் வெண்ணெணய் திருடி உண்டு அன்பில் கட்டுண்டாய்.
அயனின் தலை ஏந்திய சிவனின் சாபமும் தீர்த்தாய்.
கோயிலடியில கமலவல்லியின் நாதனே! திருப்பேரானே! (கையில்)