ராகம் – சாவேரி தாளம் – ஆதி
பல்லவி
திருவிட வெந்தை எம்பிரானே!
வரும் இடர்தனைக் களைந்தருள்வாயே! (திருவிடவெந்தை)
அனுபல்லவி
திரிந்தலையும் மனம் பிறவிப்பயன் எல்லாம்
நேர்வித்துக் கொடுவினை அழித்திடுவாயே! (திருவிடவெந்தை)
சரணம்
திருமகள் கோமளவல்லியின் நாதனே!
ஒருமுந்நூற்றறுபது பெண்டிரை மணந்து
ஒருங்கிணைத்து அகிலவல்லி ஆக்கிய
திருவுடை நித்ய கல்யாணப் பெருமாளே! (திருவிடவெந்தை)