ராகம் – மணிரங்கு தாளம் – ஆதி
பல்லவி
நீர்வண்ணனே கரு நீலமுகில்வண்ணனே!
இருநிலம் காக்கும்அணிமாமலர் மங்கைநாதனே! (நீர்வண்ணனே)
சரணம்-1
விரும்பியே தானாய்த் தோன்றிய தலம் இதுவே
பிரார்த்தனைக்கு அருளும் சுக்கிரன் தலமே.
திருக்குளம் நான்கு சூழும் திருநீர்மலையிலே
திருக்கோலம் நான்குடன் ஆயுள்விருத்தி தருபவனே! (நீர்வண்ணனே)
சரணம்-2
அரங்க விமான நிழலில் ஆதிசேஷன் படுக்கையில்
அரங்கநகர் அப்பனாய் பள்ளி கொண்டாயே!.
இரணியனைக் கொன்ற சீற்றம் அடங்கிட நீர்மலைவந்து
பிரகலாதனுக்கருளியே ஆதிசேடனில் அமர்ந்தாயே!. (நீர்வண்ணனே)
சரணம்-3
திருவிக்கிரமன் பாதகங்கை சிவன்முடி தாங்கிட
நீர்மலையில் விசுவ ரூபம் எடுத்து நின்றாயே!
இராமனாய் சீதையுடன் தம்பியர் அனுமன்சூழ
இராமகவி வால்மீகிக்குத் தரிசனமும் தந்தாயே!. (நீர்வண்ணனே)