ராகம் – கேதாரம் தாளம் – ஆதி
பல்லவி
அரவின் மேல் துயில்கொள்ளும் ராகவனே!
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனே! (அரவின்)
அனுபல்லவி
இராமனின் அசுவமேத யாகப்பொன்சீதையாய்
திருமகள் வசுமதியை மணந்தவீர ராகவனே! (அரவின்)
சரணம் 1
பெருகும் புனிதநீர் சேரும் அமாவாசையில்
ஹ்ருத்தாப நாசினிகுளம் தரும்பலன் கோடியே.
வீரபத்திரர் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவனே!
வருத்தும் பிணியகற்றி மகிழ்வளிப்பவனே! (அரவின்)
சரணம் 2
கரத்தில் சுழலும் சக்கரம் மதுகைடபரை வென்றிட
கருமுகில்வண்ணன் விமானம் விஜயகோடி விமானமானதே!
கரந்துயிராய் மறைந்து பரந்துடலாய் நின்று
கருடவாகனத்தில் தோன்றி பரமபதம் அளிப்பவனே! (அரவின்)