ராகம் – பெஹாக் தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
என்னைப்பெற்ற தாயே! என்றும் நான் உன்சேயே.-நீ
நின்ற இடம் உன்பெயரால் திருநின்றவூர் ஆனதே. (என்னை)
அனுபல்லவி
அன்பருக்குஅருளும் பக்தவத்சலன் சுதாவல்லியே!
என்றும் நாரணன் நெஞ்சை அகலாத தேவியே! (என்னை)
சரணம்
தான்உகந்த இடமெல்லாம் தண்துழாய் மாலையானை
நின்றவூர் நித்திலத்தைத் தலசயனத்திலும்,
நின்றவூர் நித்திலத் தொத்தைக் கண்ணமங்கையிலும்
கண்டு மங்கை பாடியதால் திகைத்து நின்றவளே (என்னை)