ராகம் – வசந்தா தாளம் – ஆதி
பல்லவி
புள்ளூர்ந்த நாயகனே! விஜயராகவனே!
வெள்ளத்தரவில் துயில் மரகதவல்லி நாதனே! (புள்ளூர்ந்த)
அனுபல்லவி
கள்ளக்குறளன் தவம் செய்த திருப்புட்குழியில்
வெள்ளமாம் வாழ்க்கைக்கடலில் நீந்தும் வழிசொல்பவனே! (புள்ளூர்ந்த)
சரணம்
கள்ளத்தனமாய்ச் சீதையைக் கவர்ந்தெடுத்த இராவணனைப்
புள்ளரசன் தாக்கியே சிறகுடன் உயிரிழந்தானே!
உளம்கொளும் அன்பினொடு இன்னருள் சுரந்தே இராமனாய்
பிள்ளை போல் ஈமக்கடன் செய்தே முக்தியும் அளiத்தவனே! (புள்ளூர்ந்த)