ராகம் – சிவகல்யாண் தாளம் – ஆதி
பல்லவி
கோவிந்தன் அவதாரம் அர்ச்சையும் எத்தனையோ?
உவந்துளம் கனிந்தருளும் காட்சிகள் எத்தனையோ? (கோவிந்தன்)
அனுபல்லவி
பவளமோ வெண்மையோ? பச்சையோ ? மேகவர்ணமோ?
பவளவல்லியோ? மரகதமோ? யாரே உன்துணையோ? (கோவிந்தன்)
சரணம்
புவியினில் நாம் காணும் அற்புத வண்ணனே! உன்
பவளவாய்ச் சிரிப்பினிலே உலகமே மறந்தேனே!
பவப்பிணி அகற்றியே அருள் செய்யும் பரந்தாமனே!
நாவாரப் பாடியே மகிழ்ந்திடுவோம் நாரணனே! (கோவிந்தன்)