ராகம் – தர்மவதி தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
கள்வனே! கச்சி கள்வனே! திருக்கள்வனூர் வாழும் கண்ணனே!
கள்வனாய் என் நெஞ்சில் புகுந்தாய் நான் உன் அடிமை ஆனேனே. (கள்வனே)
அனுபல்லவி
கள்வனாய் வெண்ணெய் திருடி உண்ட மாயனே! மணிவண்ணனே!
அள்ளியே அண்டம் முழுதுமுண்டு அன்னை அன்பில் கட்டுண்டவனே!(கள்வனே)
சரணம்
கள்ளக்குறளாய் வாமனனாய் வந்தவனே! திரு விக்கிரமனே!
வெள்ளத் தரவில் துயில்பவனே! ஆலிலையில் வலம் வருபவனே!
ஒளிந்து கேட்டுக் கள்வனானஆதிவராகப் பெருமாளே!
புள்ளூர்ந்த நாயகனே! அஞ்சலை நாச்சி மணவாளனே! (கள்வனே)