ராகம் – குறிஞ்சி தாளம் – ஆதி
பல்லவி
கார்கடலும், உலகேழும், மலைஏழும் உண்டவனே!
நீரழலாய், நெடுநிலனாய், காற்று, வானாய் ஆனவனே! (கார்கடலும்)
அனுபல்லவி
திருமகளாம் கமலவல்லி நாயகனே! புனல் உருவே!
ஓரோர் அணுவினிலும் கரந்து பரந்து இருப்பவனே! (கார்கடலும்)
சரணம்
பார்வதிக்குக் காட்சி கொடுத்தருளிய கருமுகிலே!
பாரினிலே நின்பாதமூலம் பற்றும் அடியவர்க்குக்
கார்வான மழை போலே வினைப் பயனை நீக்கிடுவாய்.
நீரகத்தாய்! கருணைமழை பொழியும் கருமணியே! (கார்கடலும்)