
ராகம் – ஆரபி தாளம் – ரூபகம்
பல்லவி
புள்ளபூதங்குடியில் அருளும் வல்வீர் ராமனே!
புள்ளரசன் சடாயுக்குக் கிரியை செய்த தனயனே! (புள்ள)
அனுபல்லவி
நள்ளிரவில் சிறையில் பிறந்த வடமதுரைக் கண்ணனே!
வெள்ளம்பெருகும் யமுனைகடந்த கோகுலக்கிருஷ்ணனே! (புள்ள)
சரணம்
கள்ளக்குறளாய் மாவலிமுன் விக்கிரமன் ஆனவனே!
கொள்ளிடம் காவிரி நடுவினில் பொற்றாமரையாள் கேள்வனே!
கள்ளூரும் பைந்துழாய் மாலையணிந்த பூதங்குடிநாயகனே!
உள்ளமும்உடலும் உனக்கேசரணென்று போற்றிப் பாடுவோமே. ((புள்ள)