ராகம் – உசேனி தாளம் – ஆதி
பல்லவி
வேகவதி ஆறென வந்த சரஸ்வதியை அணையால் தடுத்து
யாகமுடிவில் புண்ணியகோடி விமானத்தில் வந்தவனே! (வேகவதி)
அனுபல்லவி
வலக்கை இடக்கை மாறிப்படுத்த யதோத்தகாரியே!
வேகார் ஸேதுவே! புஜங்கசயனனே! மூதூர் கச்சி வரதனே!(வேகவதி)
சரணம்
வெ ஃ காவில் அருள்புரியும் கோமளவல்லி நாதனே!
கணிகண்ணன் பைந்தமிழின் பின்சென்ற பசுங்கொண்டலே!
மகிழ்வுடன் கால்நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணனே!
இகமதில் நின்றிருந்து கிடந்து நடந்தவனை நினை மனமே. (வேகவதி)
madam super.