ராகம் – பூபாளம் தாளம் – ஆதி
பல்லவி
மாவலிமுன் வாமனனாய் வந்து கால் தூக்கி நின்று,
மூவுலகும் அளந்தவனே! உத்தமனே! விக்கிரமனே (மாவலி)
அனுபல்லவி
மாவலியின் தவப்பயனாய்ச் சிறுவடிவில் பாம்புருவில்
தீவினைகள் தீர்க்கவந்த தேவதேவனே! பேரகத்தானே! (மாவலி)
சரணம்
அசுவமேத யாகம் செய்த பலனனைத்தும் தருபவனே!
பெருவெள்ளப் பேரழகால் கவர்ந்திழுக்கும் பேரானே!
ஆரணவல்லித் தாயாருடன் அற்புதக் காட்சி தரும் உன்
திருவடியைப் பணிந்திடுவேன் சத்ய விரத க்ஷேத்திரத்திலே. (மாவலி)