ராகம் – ஜோன்புரி தாளம் – ஆதி
பல்லவி
நேர் ஒருவர் இல்லாத நிலாத் திங்கள் துண்டத்தானே!
நேர் ஒருவர் இல்லா வல்லியின் நாயகனே! (நேர்))
அனுபல்லவி
எரியும் மாமரத்தைத் துளiர்க்கச் செய்த பரமனே!
பார்வதியின் பேரழகை மீட்டுத் தந்த பரந்தாமனே! (நேர்)
சரணம்
பார்த்தன் அன்புடன் கண்ணனின் பாதம் சேர்த்த மலரைச்
சிரத்தில் ஏந்திய சிவனின் கலைநிலவில் கண்டானே.
கரமதில் சங்குசக்கரம் ஏந்திய வாமனனாம்
நாரணனே.. முதற்கடவுள் என்பதை அறிந்தானே. (நேர்)