ராகம் – மிஸ்ரமாண்டு தாளம் – ஆதி
பல்லவி
திருநீரகம் உறையும் ஜகத்ரக்ஷகா மாலவனே!
நீர் ஆழியில் துயிலும் எழில் பாலகனே! (திருநீரகம்)
அனுபல்லவி
வாரணத்தின் குரல் கேட்டு ஓடிவந்த ஆதிமூலமே!
பிரகலாதனைக் காக்க வந்த வீரநரசிம்மனே! (திருநீரகம்)
சரணம்
நீர்மையினால் பஞ்சவரைக் காத்தவனே! கண்ணனே!
நீரில் அக்ரூரருக்குத் தெய்வ காட்சி தந்தவனே!
கார்முகிலாய் அருள்பொழியும் நிலமங்கைநாதனே
திருநெடுநீர் வண்ணனே! என் உளமுறை தேவதேவனே! (திருநீரகம்)