ராகம் – கௌரிமனோஹரி தாளம் – ஆதி
பல்லவி
ஆதிஅந்தம் இல்லாத அனந்தனே அற்புதமே
பாதமலர் தொழுதோம் திருப்பாடகம் அமர்ந்தவனே!.(ஆதி)
அனுபல்லவி
தூது சென்று அருள்செய்த பாண்டவர் தூதனே!
எத்திசையும் பணிந்தேத்த கீதை சொன்ன நாயகனே!. (ஆதி)
சரணம்
மாதவனே! ருக்மணி சத்யபாமா நாதனே!.
மதுசூதனனே! உனது விஸ்வரூபம் தரிசிப்போம்.
கோதில் ஒண்சுடரே! உலகு உய்ய வழி அருள்வாய்.
ஏத்திப் பாடுவோம். நாரணன் உன் பேர்சொல்லி வாழ்வோம். (ஆதி)