ராகம் – குந்தலவராளி தாளம் – ஆதி
பல்லவி
அழகியசிங்கனே! நரசிம்மனே! ஆளரி முகுந்த நாயகனே!
அழகியான் தானே அரியுருவாய் வேளுக்கை அமர்ந்த பெருமானே!. (அழகிய)
அனுபல்லவி
ஆழியும் சங்கும் ஏந்தியவன் வாளுகிரால் கீறி இரணியனை
அழித்தே கோபமும் அடக்கிச் சிறுவனுக்கு அபயம் அளித்த ஆழிவண்ணனே!. (அழகிய)
சரணம்
துழாய் மாலையினை அணிந்தவனே! அமிருதவல்லியின் நாயகனே!
தொழுது வணங்கிய பிருகு முனிக்கு முசுகுந்நதனாய் வந்தவனே!
பாழியங்தோளுடை பத்மநாபனே! பாதம் பணிந்தேன் சிங்கபிரானே!
வழித்தங்கும் எந்தன் வல்வினை மாற்றி வெந்நரகில் சேராதெனைக் காக்கும். (அழகிய)