ராகம் – வராளி தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
திருத்தண்காவில் அருள்புரியும் தீபப்பிரகாசனே!
மரகதவல்லி நாதனே! முதலாழ்வாரின் ஞானச் சுடரே! (திருத்தண்காவில்)
அனுபல்லவி
இருள்நீக்கி ஞாலமதில் ஒளிகூட்டிய தேவனே!
பரமாத்மாவை அறியும் ஆத்ம ஞான ஒளியானவனே! (திருத்தண்காவில)
சரணம்
பிரமன் யாகம் அழித்திடவந்த மாயநலன் அரக்கனைத்
திருவிளக்காக்கிச் சரஸ்வதிக்குக் காட்சி கொடுத்தவனே.
கருமுகிலே முடிச்சோதி முகச்சோதியுமானவனே.
பரிமுகப் பெருமாளே தூப்புல் தேசிகனின் ஆரமுதே.(திருத்தண்காவில்)