ராகம் – ரமாமனோஹரி தாளம் – ருபகம்
பல்லவி
திரிபுரம் மூன்று அழித்தான், அரியாய் இரணியனை வதைத்தான்
குறளாய் உலகம் அளந்தான் அட்டபுய கரத்தானே. (திரிபுரம்)
அனுபல்லவி
பிரமன் செய்த யாகம்தன்னை அழிக்கவந்த சரஸ்வதியைக்
கரங்களெட்டில் ஆயுதமேந்தி அடக்கினான் ஆதிகேசவனே. (திரிபுரம்)
சரணம்
சரபம் ஒன்று திருமாலைச் சரணடைந்து ஓரமாக
அரவணையான் சன்னதியில் யாகம் காத்து நிற்குதே.
கருடன் மேலே பறந்து வந்து யானை உயிர் காத்தவனே.
திருமகள் அலர்மேல் மங்கையுடனருளும் வரதராஜனே! (திரிபுரம்)