ராகம் – கீரவாணி தாளம் – ஆதி
பல்லவி
பேரருளாளனே! தேவாதி ராஜனே!
வரம்தரும் புண்ணியகோடி விமானம் கீழ் அமர்ந்தவனே! (பேரருளாளனே)
அனுபல்லவி
பிரம்மனும் கஜேந்திரனும் தேவகுருவும் ஆதிசேடனும்
உருகி வணங்கிய பெருந்தேவியின் மணாளனே! (பேரருளாளனே)
சரணம் 1
திருக்கச்சியில் சத்யவிரத க்ஷேத்திரத்திலே
ஸரஸ் குளத்தில் மூழ்கிய அத்திவரதனே!
நாற்பது வருடங்களுக்கொரு முறை வெளிவந்து
தரிசனம் கொடுத்திடுவாய் அத்தியூரானே! (பேரருளாளனே)
சரணம்2
ஐராவதமே மலையாய்ப் பெருமாளைத்தாங்கிடுதே
கூரத்தாழ்வான் பார்வையை மீட்டுத் தந்த தலம் இதுவே
சூரிய ஒளிக்கதிர்கள் தேவப் பெருமான் முகம் தேடுதே.
பொருளாசை மண்ணாசை பெண்ணாசை நீங்கிடுதே (பேரருளாளனே)