ராகம் – சுத்ததன்யாசி தாளம் – ஆதி
பல்லவி
வாமன க்ஷேத்திரம் அழகிய நம்பி அருளும் க்ஷேத்திரம்.
பூமிதேவி குறுங்குடி வல்லியின் குறுங்குடி க்ஷேத்திரம். (வாமன)
அனுபல்லவி
எம்பெருமானின் சீடராய்த் தென்பதரி ஆஸ்ரமத்தில்
மாமுனிவண்ணன் மாயம் செய்தான் வடுகநம்பியாய். (வாமன)
சரணம்
நம்பாடுவானின் பக்தி ஏகாதசி பெருமை கூறுமே
கொடிமரமும் நம்பியைக் காண அவனுக்கு விலகி நின்றதே.
நம்மாழ்வாராய்ப் பிறந்தவன் திருக்குறுங்குடி நம்பியே..
திருமங்கைக்கு முக்தியளித்தவன் திருப்பாற்கடல் நம்பியே. (வாமன)