
ராகம் – சுத்தசாவேரி தாளம் – கண்ட சாபு
பல்லவி
புன்டரீகாக்ஷனே! வெள்ளறை நாதனே!
வெண்ணிறக்குன்றின்மேல் சுவேதகிரி வாசனே!(புண்டரீ)
அனுபல்லவி
வண்டல் குறையாத வெள்ளறை வயலில்
செண்பக வல்லியின் பின்னால் நடந்துவரும் (புண்டரீ)
சரணம் 1
இரண்டுவழி வாசலுடன் வைகுந்தம் போலே
அண்டியவர் இன்பம் பெறும் ஹிதக்ஷேத்திரம்.
மண்ணகத்தில் ஆன்மாவைத் தூய்மை செய்ய
அன்புடன் பரிமுகமாய் வேதங்கள் மீட்டவனே! (புண்டரீ)
சரணம் 2
விண்ணவர் தேவர்க்கு அமுதம் அளித்தவனே!
அன்னமாய் மறை தந்த ஞானச் சுடரே!
விண்மண் அளந்த திருவிக்கிரமனே!
ஏனமாய்ப் பூமியை மீட்ட வராகனே! (புண்டரீ)