ராகம் – சுருட்டி தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
வைத்த மா நிதியமே! திருக்கோளூர் தேவனே!
கோதில் கோளூர்வல்லி குமுதவல்லி நாயகனே!. (வைத்த)
அனுபல்லவி
சித்தம் கனிந்துருகி நவநிதிகள் எல்லாம்
வைத்தமாநிதியிடம் பெற்றான் குபேரனே. (வைத்த)
சரணம்
மதுசூதனன் அருளால் ஞானசூரியன் நம்மாழ்வார் மூலம்
மதுரகவி பாடியே பாசுரநிதியும் பெற்றாரே.
நித்திய பவித்திரனால் தர்ம குப்தன் வறுமை நீங்கியதே.
அனைத்துலகுமுண்டுமிழ்ந்த அரவிந்த லோசனனே! (வைத்த)