ராகம் – சாரங்கா தாளம் – ஆதி
பல்லவி
ஆனந்த நிலய விமானம் கீழ் ஆடுகின்ற கூத்தனே!
ஸ்ரீநிவாசனாய்க் கமலவல்லியை மணந்த மாயக் கூத்தனே (ஆனந்த)
அனுபல்லவி
தென்குளந்தையில் பிரஹஸ்பதியின் பாவம் தீர்த்த கூத்தனே!.
இன்னல் கொடுத்த அசுரனைக் கொன்ற சோரநாட்டியக் கூத்தனே!. (ஆனந்த)
சரணம்
கன்னியாய்க் கமலவல்லி தவம் செய் பாலிகா வனக் கூத்தனே!.
வினைஅறுக்கும் ஆழிவலவனின் தாடகாவனக் கூத்தனே!.
நினைத்தாலே அருள்புரியும் பெருங்குளத்துக் கூத்தனே!.
மனமுருகி அழைத்தாலே மனக்கோயிலாடும் கூத்தனே!.(ஆனந்த)