ராகம் – பீலு தாளம் – ஆதி
பல்லவி
ஆதிசேடன் குடைபிடிக்க வரதஹஸ்தம் காட்டியே
மாதவன் வரகுணமங்கையுடன் அமர்ந்திருக்கிறான்.(ஆதிசேடன்)
அனுபல்லவி
நத்தம் மண்ணில் பிறந்தவர் கொடிய பாவம் செய்தாலும்
சித்தம் இரங்கி மரணத்தில் முக்தியளiக்கும் முகுந்தனே! (ஆதிசேடன்)
சரணம்
வேதவித்தாம் அந்தணன் மாதாபிதா குருவுடன் அவர்
பாதம் தொழுது மந்திர சித்தியும் பெற்றானே.
வேதமுதல்வன் விஜயாசனன் பங்கயத்தாள் அருளும் சேர்ந்தால்
நாதனின் சோதி ஒளியில் கொடியவினைகள் அழிந்திடுமே. (ஆதிசேடன்)