ராகம் – ஸரஸாங்கி தாளம் – ஆதி
பல்லவி
பரமபதநாதன் வந்தான் திரு வைகுண்டம் தேடி
பரத்துவத்தைக் காட்டும் வைகுண்டவல்லியுடன் (பரமபத)
அனுபல்லவி
அரவணை ஆதிசேடனும் குடைபிடித்துப் பணிசெய்கிறான்
கருணையில் எளிமையில் கள்வனுக்குதவும் கள்வனாகி (பரமபத)
சரணம்
பொருநையாற்றங்கரையில் தவம் புரிந்த சத்யலோக
பிரம்மனுக்கு வேதம் நான்கும் மீட்டுக் கொடுத்தவனே!.
திருமேனி செய்த சிற்பிகிள்ளiய வடுவைக் கன்னம் ஏற்றதே.
சூரிய கிரணங்கள் அவன் திருவடியைத் தேடி வருகுதே (பரமபத)