ராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
பல்லவி
நாகணைமேல் கிடந்தானே! வானவர்கோனே! மாயனே!
மகரநெடுங்குழையானே! தென்திருப்பேரையானே!. (நாகணை)
அனுபல்லவி
குழைக்காது வல்லி நாதனே! வருண பாசம் அளித்து
தாகம் தீர்த்து வறட்சி போக்கும் நீர்மையானவனே!. (நாகணை)
சரணம் 1
நிகரில் முகில் வண்ணன் ஊரில் ஓதக்கடல் போலே
பகலும் இரவும் வேதஒலியும் விழா ஒலியும் கேட்கும்.
அகன்று கருடனும் ஒதுங்க பிள்ளை விளையாட்டை
அகமகிழ்ந்து காணவே வழியும் செய்தானே. (நாகணை)
சரணம் 2
அகன்ற தாமிரபரணி ஆற்றங்கரை மணலில் என்றும்
அகலாத திருமகள் கண்ணனுடன் விளையாட
வெகுண்ட நிலமகளiன் ஊடல் தீர்த்த மணிவண்ணனே
சுக்கிரனின் க்ஷேத்திரமாய் அருள்புரியும் தேவனே (நாகணை)