ராகம் – சுபபந்துவராளி தாளம் – ஆதி
பல்லவி
திருமாலின் திருவருளே பெருகும் திருப்புளிங்குடியே
குருவருளும் ஆட்சிசெய்யும் பூமிபால க்ஷேஷத்திரம் (திருமாலின்)
அனுபல்லவி
திருமகளாம் மலர்மகளின் பூமகளின் நாதனே!.
கார்மேகத் தாமரைக் கண்ணனே காய்ச்சின வேந்தனே!.(திருமாலின்)
சரணம்
பிரம்மஹத்தி தோஷம் நீக்கி இந்திரனைக் காத்தவனே!.
அரக்கனாய் மாறிய அந்தணன் சாபம் நீக்கியவனே!.
இருமாதரும் இணையடி வருடும் பூமி பாலனே!.
இருவினைகளைந்திட ஆழி சங்கு வில் வாள் தண்டேந்தியே. (திருமாலின்)