ராகம் – சரஸ்வதி தாளம் – ஆதி
பல்லவி
தேவதேவப் பிரானே! துலைவில்லி மங்கலப்பிரானே!
தவளவெண் சங்குசக்கரம் ஏந்தும் அரவிந்தலோசனே!. (தேவ)
அனுபல்லவி
கைவண்ணம் தாமரைப்பூ வாய்கண்களும் பாதங்களும்
அரவிந்தமே என்றும் அருள்புரியும் ஒண்சுடரே!. (தேவ)
சரணம்
நவக்கிரகங்களுள் ராகு கேது க்ஷேத்திரமே.
தேவர்குழாம் கூடிநின்று தொழுத இடம் இதுவே.
ஐவாய் அரவணைமோல் துயிலும் ஸ்ரீநிவாசனே!.
ஐவர்க்காய்த் தூது சென்ற கருந்தடற்கண்ணி நாதனே!.(தேவ)