ராகம் – ரஞ்சனி தாளம் – ஆதி
பல்லவி
ஆதிநாதன் தானே தோன்றி ஆதிநாதவல்லியை மணந்த
சோதிப்பிரான் அடிமையாகுவோம்.திருக்குருகூர் நகரில் (ஆதி )
அனுபல்லவி
புதிதாய்ப் பிறந்து மடியும் பூவுலக வாழ்க்கையிலே
இது பஞ்சநத Eக்ஷத்திர தேசம். பரமபத நாதன் எல்லையே (ஆதி)
சரணம் 1
பூத்த தாமரைக் காட்டில் கருமுகிலாய்ப் பவனிவரும்
ஆதிப்பிரான் கருடன் மேலே காட்சி தருகிறான்
ஏத்தியே வானவரும் வணங்கியே மண்ணவரும்
பாத தரிசனம் தேடி தேடி அலைகிறார். (ஆதி)
சரணம் 2
வேதம் செய்த தமிழ் மாறன் கலியின் இருள் நீங்கிடவே,
மதுரகவியின் முன்னாலே ஞான ஒளி வீசினான்.
நதியில் பொருனை நீரெடுத்து அருள்கனிந்து வெளிவந்து
நாதன் சடகோபன் அருள் திருமேனியாய் ஒளிர்கின்றான். (ஆதி)