ராகம் – மதுவந்தி தாளம் – ஆதி
பல்லவி
ஆடிப்பெருககென வரும் அருள் வெள்ளம் -அதில்
ஆடித்திளைத்துத் தினம் மகிழும் எனதுள்ளம். ( ஆடி)
அனுபல்லவி
ஆடிப் பூரத்து நாயகி(யே) பாவைநீர்
ஆடித்துதித்தாலே தீரும் முன் வினையே. (ஆடி)
சரணம்
பாடிப் பதம் பணிந்தேன் வில்லிப்புத்தூரினிலே
கோடிநலம் அடைந்தேன் கோதையே உனை நினைந்தே.
நாடிவரும் எந்தன் நாவினுள் உறைவாயே.
ஈடிணையில்லாத இன்பமும் தருவாயே (ஆடி)