ராகம் – அமிருதவர்ஷணி தாளம் – ஆதி(திஸ்ரம்)
பல்லவி
வேதங்களுக்குப் ப்ரணவம்போல் மறைகளுக்குப் பல்லாண்டு.
மதுரவல்லிசுந்தரராஜன் கூடல்நகரே பரமபதமாம். ( வேத)
அனுபல்லவி
பூதலத்தை பாதுகாக்கும் திருமாலே பரம்பொருளாம்.
மதங்களiலே வைணவமே முக்திதரும் சாதனமாம். (வேத)
சரணம்
கிருதமாலா நதிக்கரையில் நான்மாடக் கூடலிலே,
நாதனைப் பாடியே விஷ்ணுசித்தர் ஆழ்வாரானார்.
வைகுந்த நாதனாய் கருடனில் ஏறியே
அமர்ந்து உலா வரும் காட்சியில் உலகமே மயங்கியதே. (வேத)