ராகம் – பௌளி தாளம் – ஆதி
பல்லவி
மோகனபுரம் செல்லுவோம் .காளமேக ஆப்தனின்
மோகவல்லி நாதனின் அடி பணிவோமே .
மோகவல்லி நாதனின் அடிபணிவோமே. (மோகனபுரம்)
அனுபல்லவி
மோகினியாய் அமிர்தம் ஏந்தி தேவர்க்களித்தான்.
நாகணைமேல் துயில்வோனும் மாயம் செய்தான் (மோகனபுரம்)
சரணம்
மோகூரில் கோடி சூரியப் பிரகாசமாயிருப்பான்.
பகைஅரசரை அழித்த தசரதன் மரகத மணியே.
யாக்கை பிரிந்து உயிர்செல்லும் ஆன்மமுக்தி பயணத்தில்
தக்கதொரு துணையாகத் தானேவந்திடுவான். (மோகனபுரம்)