ராகம் – காம்போதி தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
அன்னநாயகி அனந்தநாயகி அமிருதநாயகி செங்கமலமே
நின்ற நாரணனைத் தேடியே தவம் புரிந்த திருத்தண்காலே. (அன்ன)
அனுபல்லவி
துன்பமே தரும் பிறவித்தளையால் வாடும் அடியாரைக் காக்கவே,
தென்றல் போலே இன்பம் தந்தெமைத் தழுவி இடரைக் களைந்திடுவான் (அன்ன)
சரணம்
அன்னையைக் காண கருடனில் ஏறி வந்தவன் திருத்தண்கால் அப்பனே.
அனந்தன் மேலே துயில்கொண்டு அடியார்க்கருள்பவனும் அவனே.
முன்னே கருடனும் சர்ப்பமும் இணைந்து அமுதக்குடமுடன் பணிகின்றார்.
குன்றாய் மாறியே ஆலமரமும் மாலவனைத் தாங்கும் பேறு பெற்றதே (அன்ன)