ராகம் – பேகடா தாளம் – ஆதி
பல்லவி
சரணாகதிக்கருளும் மணிவண்ணனே!
தருப்பைப்புல்சயனம் கொண்ட மாயனே! ரகுராமனே! (சரணாகதி)
அனுபல்லவி
சரணடைந்த வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்தவனே!
சரமஸ்லோகம் சொன்னவனே!. கோலவில்லி ராமனே! (சரணாகதி)
சரணம்
இருதேவியர் கல்யாணவல்லி பத்மாசனிநாதனே!
கருணையங்கடலே! கல்யாண ஜகந்நாதனே!
சரந்துரந்திலங்கை மன்னனை வென்ற வில்லாளனே!
சரணடைந்தேன் உன்னையே புல்லாணி பரந்தாமனே!
துரித காலம்
திருவடியால் உலகளந்திட மாவலி சிரம்தனில் கால்பதம் வைத்தவனே.
நரஹரியாய் இரணியனின் ஆகம் கீறி வதம்செய்த நரசிம்மனே. (சரணாகதி)